தனித்திருப்பது நாட்டுக்காக..! விலகியிருப்பது நமக்காக..!

இலக்கியம் கவிதைகள் லைஃப் ஸ்டைல்
corona poem - 2026

காற்றோடு யுத்தம்…

கண்ணுக்குத் தெரியாத
ஓர் எதிரியின் தாக்குதலுக்கு
ஈடு கொடுக்க இயலாது
போராடுகிறாய்

ஒருவேளை
இது பிரளயத்திற்கான
ஒத்திகையா அல்லது
பிரளயமேவா

மனித இனம் அஞ்சி நடுங்குகிறது
பறவை மிருகங்கள் எதுவுமறியாது

ஏன்?

வாழ்க்கையின் தத்துவம்
அறிவதற்காகவா
வாழ்க்கையின் தவறுகளை
திருத்துவதற்காகவா

விஞ்ஞானம் வளராத இவ்வுலகம்
இப்படித்தான் இருந்திருக்குமா
மனிதமில்லா இம்மண்
இப்படித்தான் பிறந்திருக்குமா

நோயின் கொடுமை
நுகர்வதற்காகவும்
நோயிலிருந்து தன்னை
காப்பதற்காகவும்
இது ஒரு முன்னுதாரணம்

கண்ணுக்குத் தெரியும்
குண்டு மழையை எதிர்கொண்டு விடலாம்
கண்ணுக்குத் தெரியா வைரஸை எப்படி எதிர்கொள்வது?

தனித்திருப்பது என்பது நாட்டுக்காக
விலகியிருப்பது என்பது நமக்காக!

  • கவிஞர் கோபால்தாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.