
இன்று திங்கள் கிழமை காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது போல், பரபரப்பாகக் காணப்பட்டது. குறிப்பாக வங்கிகளில்தான் வரிசையாக வெளியில் பலர் காத்திருந்தனர்.
மதுரை நகரில் இது பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப் பட்டது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்று, பணம் போட்டு அல்லது வேறு விதமான நடமுறைகளுக்காக இன்று காலைமுதலே வரிசை கட்டி நின்றனர். வங்கிகளில் ஏசி குளிர்சாதனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறப் பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிக்கு வெளியே பலரை வரிசையாக நிற்க வைத்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதாகக் கூறினர்.
அதன் படி ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப் பட்டனர். என்றபோதும், வங்கிக்கு வெளியே கூட்டமாக மக்கள் நெருக்கியடிக்கத்தான் செய்தனர். அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வங்கிக்கு உள்ளே இருப்பவர்களுக்கும் பரவாதா என்று கேள்வி எழுப்பினர் பொதுமக்கள் சிலர்.
இதுபோல் பல்வேறு இடங்களிலும் கடைகளில், வணிகத் தலங்களில் மக்கள் நெருக்கத்தைப் பார்க்க முடிந்தது. பல இடங்களிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படாமல் இருந்ததைக் காண முடிந்தது.

இதனிடையே, இன்று காலை முதல் கொரோனாவால் மக்கள் நடமாட்டத்துக்கு தடை செய்யப் பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் வணிகத் தலங்கள் சிலவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப் பட்டது. அதன்படி, இந்த வணிக நிலையங்கள் வழக்கமான சூழலில் இயங்கத் தொடங்கியுள்ளன.

34 வகை கடைகள் திறக்கலாம். அதன் விவரம் பின்வருமாறு :
- 1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
- 2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
- 3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)
- 4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்.
- 5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்.
- 6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்.
- 7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்.
- 8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்.
- 9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்.
- 10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும்
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள். - 11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்.
- 12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்.
- 13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை).
- 14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக
பகுதிகளில் மட்டும். - 15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்.
- 16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்.
- 17) பெட்டி கடைகள்.
- 18) பர்னிச்சர் கடைகள்.
- 19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்.
- 20) உலர் சலவையகங்கள்.
- 21) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்.
- 22) லாரி புக்கிங் சர்வீஸ்.
- 23) ஜெராக்ஸ் கடைகள்.*
- 24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்.
- 25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்.
- 26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்.
- 27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்.
- 28) டைல்ஸ் கடைகள்.
- 29) பெயிண்ட் கடைகள்.
- 30) எலக்ட்ரிகல் கடைகள்.
- 31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்.
- 32) நர்சரி கார்டன்கள்.
- 33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்.
- 34) மரம் அறுக்கும் சாமில்.