திண்டுக்கல் – சபரிமலை இடையே புதிய ரயில் பாதை குறித்து பணிகள் தொடங்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது.
இன்று மத்திய ரயில்வே தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்து பேசினார்.
அப்போது மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல் சபரிமலை இடையே புதிய ரயில் திட்டத்தை உடனடியாக தொடங்கவும் நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.