ஏப்ரல் 22, 2021, 2:44 காலை வியாழக்கிழமை
More

  தேர்தல் கால வெண்பாக்கள்

  தேர்தல் கால வெண்பாக்கள்" (கவிஞர் மீ.விசுவநாதன்)

  IMG 20210323 WA0015 - 1

  தேர்தல் கால வெண்பாக்கள்”
  (கவிஞர் மீ.விசுவநாதன்)


  உயிரே உறவே உலகே எனவே
  கயிறே திரிக்கும் கலையே – வயிறே
  துடிக்கும் படியே குடியைக் கெடுக்க
  நடிக்கத் தெரிந்ததே நாக்கு. (1)

  மெய்யிலே ஆசையை மேன்மையாய்க் கொள்ளென்றேன் ;
  செய்கிறேன் என்றவர் சொன்னதோ, ” பொய்யெனும்
  தேகத்தில் முப்போகம் காண்பதற்கு எப்போதும்
  காமத்துப் பாலைக் கல.” (2)

  வாக்குக்காய் வாசலில் வந்து கிடப்போரே !
  நாக்கில் நரம்பின்றி நாளெலாம் பேசியேன்
  சேமம் கெடுக்கின்றீர் ! பேசாமல் ஊழலிலா
  நாமத்தைச் சொல்லி நட . (3)

  ஓட்டுக்காய் கையில் ஒருகாசு பெற்றாலும்
  நாட்டுக்கு நாம்துரோகம் செய்கின்றோம் – வீட்டிற்குச்
  சாபத்தைச் சேர்க்காதீர் ! மானமுடன் சொல்லிடுவீர்,
  “பாபப் பணமே பதுங்கு “. (4)

  மதுவிலக்கு வேண்டுமென மாநாடு போட்டுப்
  புதுவழக்குப் பேசுகிறார் பொய்யர் – இதுபோன்ற
  போலிகள்தான் நாக்கூச்சம் இல்லாமல் கூறுகிறார் ,
  “கூலிக்கு ஜாலி குடி”. (5)

  வெற்றிமேல் வெற்றி வெறிபிடித்த வெற்றியென
  சுற்றித் திரியாதீர் சொந்தங்காள் ! – கற்றவர்
  உள்ளத்தில் கள்ளம் புகுந்ததால் அந்தவோர்க்
  கள்வனின் ஓட்டெலாம் காசு . (காசு – குற்றம்) (6)

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »