வஞ்சகனை மாய்த்திட்ட வாஞ்சி!

கவிதைகள்
vanchinathan
வாஞ்சிநாதன் – ஓவியம்: ஜெ.பிரபாகர்

இன்று விடுதலைப் போராட்டத் தியாகி
வீர வாஞ்சிநாதன் நினைவுநாள்.
அமரனுக்கு என் நினைவஞ்சலி!

இந்தியன் கோழையென இறுமாந்த வெள்ளையனை
தந்திரம் ஏதுமின்றி முன்னெதிரில் பழிதீர்த்தாய்

வேதநூல் பிடித்திடும் கரத்தினில் வேட்டுடைத்தாய்
வெறியன் அலறிட வஞ்சின வினைமுடித்தாய்

கட்டிளம் மனைவிநின் கண்ணுக்குத் தெரியவில்லை
கட்டறுத்து அன்னையின் விடுதலைக்கே விரைந்திட்டாய்

தேசபக்தர் துயர்துடைக்க தீரமிகு வழிசென்றாய்
தேகத்தே மறைந்தாலும் நெஞ்சகத்தில் நீநின்றாய்

வஞ்சகனை மாய்த்திட்ட வாஞ்சியே நீவாழி!
அச்சத்தை அறுத்திட்ட அந்தணனே நீவாழி!

©️ பத்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.