இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!

Published:

dmk meet mk - 2026

இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டு
இதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்
இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லை
அதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்

இதுவெல்லாம் நேற்று…

இன்றோ..?

இதழாளன்தானா நீ… தான்தோன்றித் தனமாக
இதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும் கேட்கின்றாய்?
இதற்கெல்லாம் பதில் சொல்ல இதயத்தில் இடமில்லை..

அலை அலையாய்க் கேள்விக் கணைகள்
வரிசைகட்டி வந்தாலும் அசராமல் பதில் சொல்வேன்…
அந்தோ…
அலைவரிசைக் கேள்வி கேட்டு அதிரவே செய்கின்றாய்…

இதயம் இழந்து நீ கேட்பதனால்,
என்
இதயம் கனத்ததுவே!
நெஞ்சம் நனைத்ததுவே!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img