இதய சிம்மாசனத்தில்… கொடுங்கோன்மை!

இலக்கியம் கவிதைகள்

pic இச்சையுடன் இதமாய்ப் பேச நச்சென்று நாலு வார்த்தை நல்லதாய் சொல்லேன் என்றாள்! அவள்.. அழகும் அமைதியும் தவழ்ந்த காட்டு ரோஜாவாய் கவர்ந்திழுத்தாள்! முட்களாகிய அரணால் என் இதயத்தில் கீறி இரத்தத்தை உறிஞ்சிவிட்டாள்! அவள்… என் முழுதுற்ற காதலின் முடிவற்ற அடையாளம்! அறிவை ஆக்கிரமித்து என் நேரத்தைத் தனதாக்கிக் கொண்டாள்! அவள்… என் கடந்தகாலத்தின் நினைவுகளை அழித்துவிட்டாள்.. என் எதிர்காலத்தின் பயத்தினையும் சிதைத்துவிட்டாள்.. அவள்… என் ராஜாங்கத்தில் சிம்மாசனமிட்டு கொடுங்கோலாட்சி புரிகிறாள்… நடப்பதை முழுதும் விரும்பியே கொடுமையான வேதனையில் என் மனம் நீடித்திருக்கிறதே..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.