ஒற்றை நிலவு நீ இருக்க…

Published:

twomoon-300x160 நாளை.. இரட்டை நிலா வானில் தெரியுமாம்! ஆண்டுகள் இரண்டுக்கு முன்பே… எவனோ அவிழ்த்துவிட்டானாம்! ஆச்சரியம்தான்! நிலவுக்குத் துணையாய்… செவ்வாய் நிலவாய்த் தோன்றும்! சொல்லி வைத்தவன் எவன்? அறிவியல் எதிர்நோக்குகள் பொய்யாகிப் போகலாம்! கணக்கிடலில் கோளாறு! ஆனால்.. அன்பின் எதிர்நோக்குகள் பொய்யாகிப் போகுமோ? என் கணக்கீடுகள் தவறிவிடாது! ஆண்டுகள் இரண்டுக்கு முன்னே என் காதல் வானின் ஒரே நிலவாய்த் தோன்றியவள் நீ! உன் செவ்வாய் திறந்து நிலவின் தண்ணொளி நீ காட்டுகையில்… இரட்டை நிலவாவது.. ஒண்ணாவது..? என் ஒரே நிலவாய் உன் முகம்! ஒன்றாகித் தெரியும் நம் மனம்!

Related articles

Recent articles

spot_img