தாகூரின் பிறந்த நாளில்…

Published:

tagore
tagore

முனைவர் சுபாஷ் சந்திரபோஸ் –

இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரின் பிறந்த நாள். 1861 மே 7. இந்திய இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம் ஆகிய கலை ஆளுமைகளில் தடம் பதித்த படைப்பாளி.

தாகூர் எழுதிய சிதைந்த கூடு சிறுகதையை இயக்குநர் சத்திய ஜித்ரே சாருலதா என்னும் பெயரில் திரைப்படம் எடுத்து குடியரசு தலைவர் விருது பெற்றுள்ளார். இந்திய நாட்டுக்குரிய பல்திறன் மிக்க கல்விக்கொள்கையில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய கல்வியாளர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சாந்தி நிகேதனில் படித்தவர்.

அச்சமில்லா அறிவு அகிலம் ஆளும்!

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய தேசிய எல்லைகளால்
துண்டாடப்படாமல் இருக்கிறதோ
எங்கே வார்த்தைகள் உண்மையின்
ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ
எங்கே சோர்வற்ற கரங்கள்
முழுமையை நோக்கி விரிகிறதோ
எங்கே அறிவு என்னும் நீரோடை மூடப் பழக்க வழக்கங்கள் எனும் பாலைப் பெருமணலில்
பாதை இழந்து போகாமல் இருக்கிறதோ
எங்கே மனம் எப்போதும் விரிந்து பரந்திடும்
சிந்தனை செயல்களில் உன்னால்
எடுத்துச் செல்லப்படுகிறதோ
அங்கே அந்த சுதந்திர சொர்க்க பூமியில்
எந்தையே என் நாடு விழித்தெழட்டும்

  • ரவீந்திரநாத் தாகூர்
ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related articles

Recent articles

spot_img