ஞாயிற்றுக்கிழமை… வாசற்கதவு திறந்து அதிகாலைச் சூரியனின் அழகைக் காண விழிகள் விரைந்தன!
மேகத்தால் மறைந்த ஒளிக் கதிர்! என் மோகத்தால் உதித்த உனது முகம்!
காலையில் காட்சி மட்டுமே தென்படும்; காதலைக் காணாது மனமோ புண்படும்!யாரோ சிலர்… மதம் மாற்றும் ஆவலில் தேவனே.. நீரே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறீர் என்று என் காதில் உரக்கச் சொல்லிச் செல்லும்போதெல்லாம்..நானோ உன்… மனம் மாற்றும் ஆவலில் தேவியே… நீயே என் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறாய் என்று உன் மீதான காதலை உரக்கச் சொல்லி உளம் மகிழ்வேன்! தேவனிடம் நீர் மனம் திரும்புவீராக… ஆமென்! என்று கூறிச் செல்லும் போதெல்லாம்… என்னிடம் நீ மனம் திரும்புவாயாக… ஆமென்க! என்று பிறர் ஆசியை நாடி நிற்பேன்! ஞாயிறு மட்டும்தானா..? நித்தமும் நீயே என் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கின்றாயே!


