கடற்கரை மணல்வெளியில் நம் காலடித் தடங்கள்… சிவந்த மெல்லிய உன் பாதங்களின் அடியில் மிதிபட்டவை மணல் துகள்கள் இல்லை… சிவந்து தடித்த உன் வார்த்தைகளில் காயப்பட்டு சிதறியஎன் மனத் துகள்கள் தானடி! காலை நேரம் உன் கூந்தலில் நெருக்கமாய்த் தொடுத்துக் கட்டிய மல்லிகை… அழகாய்த்தான் அசைந்து சிரிக்கிறது! நேரம் கடந்து மாலை வந்தால்… வாடிய பூக்கள் நீ நடக்கும் பாதையில் உதிர்ந்து விழுந்து என் உள்ளம் தைக்கும்! நீயும் உன் நேசிப்பைச் சொல்ல நாட்கள் கடத்தி நேரம் போக்குகிறாய்! உன்னோடு கைகோத்து உடன் வந்த எந்தன் மனம் வாடிய பூவின் வாட்டம் சொல்லும் கேளடி! ஆனாலும் பெண்ணே… தொட்டுப் பேசாமலே நீ என்னைக் கட்டிப் போட்டவள்! உன் முன்னே பெட்டிப் பாம்பாய்க் கட்டுண்டு கிடக்கிறேன்! நீ என்னை விட்டுச் செல்லப் போகிறாய்… உணர்த்துகிறது உள்மனம்! ஈரத்தைக் காயவிட்டு உலர்த்துகிறது உன்மனம்!
காலடித் தடங்கள்
Popular Categories


