
கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்
உலகத்து சமத்துவத்தின் பெருவிழா – என்றும்
உயர்வான சனாதனத் திருவிழா!
திலகமென்று பாரதத்தின் உறுவிழா – இந்த
தரணிதனில் புவி வியக்கும் ஒரு விழா — 01
திரிவேணி சங்கமமே அமிர்தகலம்(ஸ்)- அதை
தெரிந்துரைத்தார் ருஷிதபஸர் சாது;முனி
திரிகாலம் அறிந்தவரின் வாக்கேவேதம்
திவ்யஒளி க்ரகக்கோட்டில் அமையுந்நாள்: — 02
பின்சந்ததி சீர்வாழ்வின் பொருட்டாக- அவர்
படைத்திட்டார் புவிப்பெரிய மாந்தர்விழா!
இன்றுவரை தீர்த்தராஜ் ப்ராயாக்ராஜில்
இனியபடி தொடர்கிறது; இனியுமுண்டு!!– 03
வர்ணத்து ஜாதியில்லை பேதமுமில்லை – பொருள்
வைப்பெழுப்பும் வறியர்,வளர் பார்வைகளில்லை
தற்குறிக்கும் தலைமையர்க்கும் தனிவழியில்லை
தாய்மடியில் குழந்தைகளாய் எல்லோர்மனது. — 04
மண்கடந்து மதங்கடந்து தானாய்வந்தார்- நம்
மனுதர்ம மேன்மைகண்டு சங்கம்நின்றார் !
கண்கடந்த ஆத்மசுத்தி நாடிசென்றார்
கங்கைமடி யமுனைமடி புனிதமென்றார் !!– 05
கோடிகோடி பக்தர்மூழ்கு ப்ரயாக்ராஜில்-ஒரு
கொசுயில்லை குப்பையில்லை கொள்குறையில்லை
நாடிபாடி வந்தவர்க்கு பிணிபசியில்லை- முங்கு
நாளவர்க்கு பெருவீடு முன்மாதிரியாம். –06
மதமாற்றம் செய்யுமொரு நிகழ்வுமில்லை -எந்த
மதத்தோடும் பிணக்கில்லை போட்டியுமில்லை!
விதத்தேயாம் தொன்றுதொட்டு சனாதனரே – அதன்
விதை,தொடா மண்ணில்லை மனதுமில்லை!! — 07
எச்சில்’துப்பி ‘உணவளித்த செய்திகளில்லை -அண்டும்
எதிர்மதத்தை தூற்றியதாய் தகவல்களில்லை
அச்சம்கொண்டு “வஞ்சம்”மனம் கொள்ளவுமில்லை – கங்கை
அன்னை போற்றி என்றுரைக்கா உதடுகளில்லை. — 08
அரைநூறு கோடிபக்தர் தீர்த்தமிட்டும் – சங்கம்
அதில்கிருமி கலங்கலில்லை; தெளிவோட்டம்:
நிறைஞான விஞ்ஞானர் ஆய்வுதேடும் – நம்
நிலம்வியக்கும் மெய்ஞ்ஞான ப்ரம்மவேள்வி !! –09
பல்லினத்து சாதுக்கள் பற்றற்றோர் – குறு
பல்லாண்டு காடிருந்த புண்யாத்மா
புள்பறக்கும் வானம்போல் சங்கம்வந்தார்
புத்துலகம் ஆக்கிட்டார் பாரதத்தை ! — 10
முனிரிஷிகள் சரண்தொட்ட திரிவேணி – புவி
மாந்தர்மெய் மனமலம்பும்; கதிதுலங்கும்
இனியெவரும் சனாதனம் பழிப்பரேல்
இடித்துரைக்கும்: அவர்வழியில் பதிலளிக்கும், –11
ஆரியரோ திராவிடரோ அன்னியர்தானோ – நல்
ஆஸ்திகரோ நாஸ்திகரோ நாடிபார்பாரோ
கூரியதாய் நிதமொளிரும் யெம்சனாதனம்
காண்பார்க்கு காணும்வித மாயக்கண்ணாடி — 12
ஓய்வெடுக்கும் வாசுகிக்கும் நாவோட்டிக்கும் – வீதி
உயர்வான அன்னமிட்ட ப்ரபுமார்கட்கும்
சாயாமல் நகர்காத்த காவலர்கட்கும் – விழா
சரித்திர அரசுக்கும் உலகார்நன்றி,– 13