கண்ணெரிச்சல் போன பின்னே..!

இலக்கியம் கவிதைகள்

monitor கணினித் திரையைக் கண்கொட்டாமல் பார்த்து… ஆண்டு பலவாச்சு; அதனாலே போச்சு~ கண்ணின் ஒளி! கண்ணெரிச்சல் காணா கணினித் திரையும் உண்டோ? காரணம் அறிந்த பின்னே கண்ணைக் காக்க கடும் முயற்சி! சிவிசி என… கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமாம்! மருத்துவத்தின் புதிய சொல்லாட்சி! மருந்துகளின் வீரிய தன்னாட்சி! கணினித் திரைக்கு ஒரு திரை; கண் ஆடியில் ஒரு திரை! கணினித் திரை ஒளிவீச்சை திருப்பியனுப்பும் ஏற்பாடாம்! எல்லாம் இருந்தும் என்னே?! கண்ணெரிச்சல் காணா கணினித் திரைப் பணியும் உண்டோ? எத்தனை எத்தனை ஏற்பாடுகள்.. எத்தனை எத்தனை மருந்துகள்! எத்தனை எத்தனை செலவுகள்! வழி தெரியாது திண்டாடினேன்! கன்னி உந்தன் களங்கமிலா முகம் கண்டேன்! கணினித் திரையில் காட்சிப் படுத்தி விட்டேன். கண்ணுக்குக் குளிர்ச்சி… கருத்துக்கு நிறைவு! உன் மலர்ந்த முகம் என் மகிழ்ச்சி தினம்! இப்போதெல்லாம் கண்ணெரிச்சல் வருவதில்லை! ஆனால் பெண்ணே… நெஞ்செரிச்சல் வந்து நிலைகுலைய வைக்குதடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.