வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல… வரு சம்பத்தைத் தேடி… வருசம் பத்தாய்க் காத்திருப்பு! ஜானகி யாரெனத் தெரியாமல்! பெண்ணுக்கே உரிய பிடிப்பாய் உடன் பிறந்த பிடிவாதம்… சட்டெனத் தோன்றும் சந்தேகம்… அதனால்… பிரிவு கண்டு ராமன் இளமையைச் சுட்டெரித்தாள் சீதை! பதிலுக்கு… சிதையெனத் தீயிட்டு சீதையின் மடமையைச் சுட்டெரித்தான் ராமன்! மாசம் பிறந்தால் மாயமானாய் மயக்கும் சம்பளப் பணம்..! இல்லறத்துக்கான இளமையைச் சுட்டெரித்து வாழ்க்கைக்கான வளமையைச் சுட்டெரித்து… வாழா வெட்டியாகவோ… வெட்டியாய் வாழ்வதாகவோ… காலம் கடத்தப் படுகிறது! ஜானகிக்கு மட்டுமல்ல..!
ஜானகிக்காகக் காத்திருப்பு!
Popular Categories



