அத்திவரதரை தரிசிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதான்… வாங்க வாங்க…!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kanchipuram athivarathar electircshock - 2026

அத்திவரதரை தரிசித்து முடிச்சாச்சு.. இனி அடுத்து…?! இதைத்தான் செய்ய வேண்டும் வாங்க வாங்க என்று அழைக்கிறார்கள் காஞ்சிபுரத்துக்கு!

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது அத்திவரதர் வைபவம். 40 ஆண்டுகளுக்கு பின்னர் 48 நாட்கள் அன்பர்களுக்கு காட்சி தர இந்த வருடம் அனந்த சரஸ் திருக்குளத்தில் அனந்த சயனத்தில் இருந்து மீண்டு திருக்கோயிலில் எழுந்தருளினார் அத்திவரதர் பெருமாள்.

இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுற்றது. இனி 40 வருடம் கழித்து தான் அவர் மீண்டும் திருக்குளத்தில் இருந்து திருக்கோயிலுக்கு எழுந்தருளப் போகிறார்.

இதனால் ஆர்வ மிகுதியாலும், பக்திப் பெருக்காலும் எண்ணற்ற பக்தர்கள் அத்திவரதர் பெருமானை தரிசித்து மகிழ்ந்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடக்கத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும்!

எனவே முன்னேற்பாடுகளில் பெரிதும் கவனம் செலுத்தாமல், சாதாரண நிலையிலேயே இருந்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் தொடங்கிய நாள் முதல் லட்சக்கணக்கில் அன்பர்கள் கூடுவதைக் கண்டு, மாவட்ட நிர்வாகம் செயலிழந்து நின்றது.

அத்தனைபேருக்கு தேவையான தங்குமிடம், கழிப்பிட வசதி, கார் நிறுத்துமிடம், தண்ணீர் வசதி என அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் படாததால், பக்தர்களை அவதிக்குள்ளாக்கி பெரும் அவப்பெயரைப் பெற்றது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்.

இத்தனை பேரின் வருகையால், காஞ்சி நகரமும் குப்பைகள் நிறைந்து, துர்நாற்றம் கொண்டதாக மாறிவிட்டது. இப்போது நகரத்தை தூய்மைப் படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

இந்நிலையில், இந்து இயக்கங்கள், தன்னார்வலர்கள் என நாளை ஞாயிறு மற்றும் அடுத்த நாட்களில் காஞ்சிபுரம் நகரைத் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட வுள்ளனர். தொண்டர்களை இந்து முன்னணி சார்பில் அழைத்துள்ளனர்.

#இந்துமுன்னணி சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் 12 வரை #அத்திவரதர் தரிசனம் கொடுத்த இடத்தின் வடபகுதியை #தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது . இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு பொன்னையா அவர்களும் நிகழ்ச்சியை துவக்கி வைக்க உள்ளார்கள்.
இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு ஒன்றரை கோடி மக்கள் பாதம் பட்ட இடங்களை தூய்மைப்படுத்தி அத்திவரதர் தரிசனம் செய்த அந்த புண்ணியத்தை பெறுவோம் வாரீர் .
தொடர்புக்கு- 9841305887 இன்று இரவே வருபவர்களுக்கு தங்கும் வசதி, காலை, மதிய உணவு ஏற்பாடுகள் உண்டு. ..  என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.