‘கடத்தல் தங்கங்கள்’! 4 பேர்… 2 விமானம்… 45 லட்சம் மதிப்பு..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
GOLD 2 - 2026
File picture:

கோலாலம்பூர் மற்றும் துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்,  பயன்படுத்தப்பட்ட லேப்டாப் உள்ளிட்டவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 7 45 க்கு சென்னைக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயதான அப்துல் ரகுமான், 29 வயதான இப்ராஹீம் ஷா இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்!

அப்போது இருவரது ஆசனவாயில் இருந்தும் 450 கிராம் தங்கம் இருந்தது கண்டறியப் பட்டது. மேலும் பயன்படுத்தப்பட்ட 18 லேப்டாப்கள் 18.25 லட்ச ரூபாய் மதிப்பில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது!

இது போல் இன்னொரு நிகழ்வாக, துபையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 49 வயதான பஷீர் அகமது, 32 வயதான ஷேக் தாவூத் ஆகிய இருவரையும் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது அவர்களும் தங்கள் ஆசனவாயில்  650 கிராம் தங்கத்தை மறைத்து வந்துள்ளனர். மேலும், 14 லேப்டாப்புகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் 26.25 லட்சம் ரூபாய்  மதிப்பில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டன!

கடத்தலில் ஈடுபட்ட 4 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.