அருவியில் குளித்த போது… தலையில் கல் விழுந்து 6 பெண்களுக்கு காயம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை

fivefalls jul10 - 2026

ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் கல்விழுந்து 6 பெண்கள் தலையில் சிறு சிறு காயம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஆண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.  அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைக்கப் பட்டார்.

நெல்லை மாவட்டம் குற்றாலம் வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த தொடர் மழையில் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டது. ஐந்தருவியிலும் சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கப் பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டனர்.

அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கற்கள், மரக்கட்டைகள் ஆகியவையும் அடித்துக் கொண்டு வரப்பட்டன. இதனால் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.