images 35 1 - 2026

தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி..

சற்றுமுன்

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.15பேர் காயமடைந்துள்ளனர்.

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு துவங்கி ஸதேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் வேகமாக செயல் பட்டு தீப்பற்றி எரிந்த தேரை அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

images 35 1 - 2026
gallerye 054948629 3016983 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.