உக்ரைனில் இந்தியர்களை மீட்க 7விமானங்கள்…

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை அடுத்த 24 மணி நேரத்தில் 7 விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வி ஷ்ரிங்லா கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக கங்கா ஆபரேஷன் மூலம் விமானங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், அடுத்த 24 மணி நேரத்தில் ரூமேனியாவின் புகாரெஸ்ட் நகருக்கு ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகருக்கு 2 விமானங்களும் செல்ல இருக்கின்றன.உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் இருந்து மாணவர்களை வெளியேற்றுவதற்கான வழியை நாங்கள் கண்டறிந்தோம். மாணவர்களை வெளியேற்ற சிறப்பு குழுக்களையும் அனுப்பியுள்ளோம்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே 4000 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டனர். உக்ரைனில் மேலும் 15 ஆயிரம் பேர் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஹங்கேரி மற்றும் ருமேனியாவிற்கு எல்லையைக் கடக்கும் பாதை இருக்கிறது. இருப்பினும், லட்சக்கணக்கான வெளிநாட்டினர் ஒரே வழியே வெளியேற முயற்சிப்பதால் போலந்துக்கு வெளியேறும் வழி அடைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைகளுக்கு அருகில் இருப்பவர்கள் சரியான வழியை நோக்கி படிப்படியாக வழிநடத்தப்படுகிறார்கள்.

கங்கா ஆபரேஷனின் கீழ், ருமேனியா மற்றும் ஹங்கேரியில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் பேர் உக்ரைனில் இருந்து தரை வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் தூதர்களையும் தனித்தனியாக அழைத்து, இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த எனது கவலைகளை தெரிவித்துள்ளேன். இந்தியக் குடிமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைப் பகிர்ந்துள்ளேன். இரு தூதர்களும் எங்களின் கவலைகளை கவனத்தில் கொண்டு இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories