2 இளம்பெண்களிடம் அத்துமீறிய 3 இளைஞர்கள்! மெரினாவில் கைது !

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
merina - 2026

சென்னை: மெரினா பீச்சில் இளம்பெண்களை கட்டிப்பிடித்து, அக்கிரமம் செய்து எல்லைமீறிய 3 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூரை சேர்ந்த இளம்பெண் வயது 24.. இவர் தன்னுடைய 21 வயது தோழியுடன், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மெரினா பீச்சுக்கு சென்றுள்ளார். பொதுப்பணித்துறை ஆபீஸ் எதிரில் உள்ள மணல் பரப்பில் உட்கார்ந்து இருவரும் பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

marina - 2026

அப்போது 3 வடமாநில இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே போதையில் இருந்திருக்கிறார்கள். உட்கார்ந்து பேசி கொண்டிருந்த பெண்களிடம், “ஹிந்தி தெரியுமா” என்று கேட்டு தானாக முன்வ்ந்து பேச ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர், ஒரு பெண்ணை பின்பக்கமாக அணைத்துள்ளார். இன்னொருவர் மற்றொரு பெண்ணிடம் கைகளால் சீண்ட தொடங்கியிருக்கிறார்.

merina 2 - 2026
கோப்பு படம்

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண்கள், கத்தி கூச்சல் போட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து, தப்ப முயன்ற இளைஞர்களை விரட்டிபிடித்து அண்ணா சதுக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்களாம் இவர்கள். ஹேமராஜ் பத்தரா, ரத்தன் பத்தரா, பெயிலாசான பத்தரா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

criam 2 - 2026

சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தங்கி, சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்களாம். இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது, “மன்னிச்சிடுங்க.. போதையில அப்படி நடந்துக்கிட்டோம்” என்று கெஞ்சி உள்ளனர். எனினும் இவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. பீச்சில் தோழியுடன் சென்ற பெண், ஒரு பத்திரிகையில் வேலை பார்ப்பவர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.