
கோவை குண்டுவெடுப்பு தொடர்பில் இப்போதாவது தமிழக அரசும், உளவுத்துறையும் புரிந்துகொள்ளுமா ? என்று தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அக்டோபர் 23.10.2022 அன்று கோவையில், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல் என பாஜக ஆதாரத்துடன் வைக்க, மாநில அரசு வழக்கைை என் ஐ ஏ விற்கு மாற்ற, என். ஐ. ஏ யும் அதை உறுதி செய்துள்ளது
அது மட்டுமல்ல, தற்போது, என். ஐ. ஏ விசாரணையில் சதியில் இறந்த பயங்கரவாதி முபீன் பல மாதங்களுக்கு முன்னரே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளான் என்ற செய்தி வெளிவந்து பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. ஆனாலும் திராவிட மாடல் அரசு அதை பயங்கரவாதிகள் சதி என இன்னும் நம்பவில்லை.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தனது சுட்டுரையில், “கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவமாக அறிவாலய அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. இது ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் என்று என்ஐஏ இன்றைய விசாரணையில் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளிலும் அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில உளவுத்துறை இப்போதாவது இந்த உண்மையை புரிந்துகொள்ளுமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.