
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஏபிவிபி மாணவரை பல்கலை நிர்வாகம் தகுதி நீக்கம் செய்ததால் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனுக்காக ஏற்பாடு ஆகியுள்ள திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தேர்தலில் எஸ் எஃப் ஐ மாணவர் தரப்பு கொடுத்த பொய்யான புகார்களின் அடிப்படையில் ஏபிவி பி மாணவர் சூர்யா என்பவரை வேண்டுமென்றே பல்கலை நிர்வாகம் திட்டமிட்டு தகுதி நீக்கம் செய்துள்ளதாக மாணவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏபிவிபி தரப்பில் மாணவர் செயலாளர் போட்டிக்கு சூர்யா என்பவர் மட்டுமே நிறுத்தப்பட்டார். மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்ட நிலையில், அவரையும் போட்டியிலிருந்து விலக வைப்பதற்காக பல்கலை நிர்வாகம் எஸ்எஃப்ஐ தரப்பினர் கொடுத்த புகார் அடிப்படையில் சூர்யாவை போட்டியிட தகுதி நீக்கம் செய்தது. சூர்யா பெயரில் ஒரு எஃப் ஐ ஆர் பதிவாகியுள்ளதாகவும் அதனால் போட்டியிட முடியாது என்றும் பல்கலை நிர்வாகம் தெரிவித்ததற்கு ஏபிவிபி தரப்பினர் கடும் ஆட்சேபம் எழுப்பினர்.
பொதுவாக இந்தியா முழுவதும் மாணவர் தேர்தலில் தண்டனை உறுதி செய்யப்பட்ட வழக்குகள் இருந்தால் மட்டுமே இது போன்று தடை விதிக்கப்படுவது பழக்கம். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை தொடங்கி இப்படித்தான் மாணவர் தேர்தல்களில் நடைபெற்று உள்ளது.
இந்தியா முழுவதும் மாணவர் தேர்தலில், தண்டனை உறுதி செய்யப்பட்ட வழக்குகள் இருந்தால் மட்டுமே தேர்தலில் நிற்பவர்கள் போட்டியிட தகுதி இழந்தவர்கள் ஆவார்கள். ஆனால் மாணவப் போராட்டங்களில் ஈடுபட்டதால் போடப்படும் வழக்குகளை அடிப்படையாக வைத்து, தேர்தல்களில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன.
நாளை நடைபெற உள்ள மாணவர் செயலாளர் போட்டியில், ஏபிவிபி மாணவர் சூர்யா உறுதியாக வென்றுவிடுவார் என்ற பின்னணியில் பல்கலை நிர்வாகம் ஏதோ ஒரு நெருக்கடியின் காரணமாக அவரை தகுதி நீக்கம் செய்து sfi மாணவர் போட்டியின்றி வெற்றி பெறுவதற்கு வழி செய்து உள்ளது என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால் நாளை நடைபெறும் மாணவர் தேர்தல் நெல்லை பல்கலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.