தமிழிசையை கட்டித் தழுவி… வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

Published:

premalatha tamilisai - 2026

‘உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்றும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை வரவேற்போம் என்றும் கூறி, தமிழிசையை கட்டிப் பிடித்து, வாழ்த்து தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் உள்ள இல்லத்தில் தமிழிசை சௌந்தர்ராஜனை சந்தித்து பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது உணர்ச்சி மிகுதியால், மகிழ்ச்சியுடன் பிரேமலதா, டாக்டர் தமிழிசையை கட்டித் தழுவி, அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img