புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடந்தது.அறந்தாங்கியில் விநாயகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி சார்பில் 11 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டைசெய்யப்பட்டது.அந்த சிலைகள் அனைத்தும் 4ந்தேதி மதியம் 1 மணிக்கு அறந்தாங்கி வடகரை முருகன்கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது அதை புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்டசெயலாளர் ராமமூர்த்தி கொடி அசைத்து துவக்கிவைத்தார்.நிர்வாகிகள் கிருஷ்ணன் புகழேந்தி கருப்பையா சீனிவாசன் கோட்டைச்சாமி,சதிஷ்குமார் குமரவேல் அழகர்சாமி சிங்காரவேலன் ராஜேஸ்வரன் அய்யப்பன் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை ஏற்பாட்டில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன்கோயில் குளத்தில் கரைக்கப்பட்டது.




