கொட்டும் அருவி; கூட்டம் குறைவு! குற்றாலம் ஆஃப் சீஸன் பிரமாதம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam sep05 - 2026

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆஃப் சீஸன் பிரமாதமாக இருக்கிறது. அருவிகளில் கொட்டும் அருவியில் குளிப்பதற்கு கடந்த மாதம் போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லை.

திருக்குற்றாலத்தில் ஜூன் மாதம் தொடங்கி மூன்று மாதங்கள் சீஸன் காலம். ஆகஸ்டு மாதத்துடன் சீஸன் நிறைவடைந்து, செப்டம்பர், முதல் டிசம்பர் வரை மழைக்காலமாக இருக்கும். இது ஆஃப் சீஸன் காலம் எனப்படும். அப்போது சிலு சிலு காற்று, சாரல் தூறல் அவ்வளவாக இருக்காது. ஆனாலும் அருவிகளில் நீர் விழுந்து கொண்டிருக்கும்.

இந்தக் காலங்களை சுற்றுலா பயணிகள் அவ்வளவாக ரசிப்பதில்லை. எனவே கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. அருவிகளில் இன்றைய காலை நிலவரப்படி, ஆர்ப்பரிப்போடு கொட்டி வருகிறது அருவி நீர்.

adavinayinar20 - 2026

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-09-2019)

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 113.10 அடி
நீர் வரத்து : 3818.87 கன அடி
வெளியேற்றம் : 1404.75 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 125.13 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 51.45 அடி
நீர் வரத்து : 331
கனஅடி
வெளியேற்றம் : 400 கன அடி

மழை அளவு:
பாபநாசம்: 36 மி.மீ
சேர்வலாறு: 12 மி.மீ
மணிமுத்தாறு: 1.2 மி.மீ
கடனா: 10 மி.மீ
ராமா நதி: 3 மி.மீ
கருப்பா நதி: 8 மி.மீ
குண்டாறு: 35 மி.மீ
கொடுமுடியாறு: 12 மி.மீ
அடவிநயினார்: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 5.80 மி.மீ
ஆய்குடி: 4.80 மி.மீ
சேரன்மகாதேவி: 2 மி.மீ
செங்கோட்டை: 41 மி.மீ
தென்காசி: 26 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.