அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னஸ் வீரர் ரபேல் நாடல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடந்த அமெரிக்க ஓபன் காலிறுதி போட்டியில் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் உடன் மோதிய நாடல் 6-4,7-5,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரர் மேட்டோ பெரெட்னியை எதிர்த்து நாடல் விளையாட உள்ளார்.



