திருமணமான பெண்ணுடன் காதல்! கண்டித்த சித்தி! இளைஞர் தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை
dead body 1 - 2026

சென்னையில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் எனும் இளைஞர். இவருக்குத் தாய் தந்தை இல்லாததால் தனது சித்தியுடன் வசித்து வந்தார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார். பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார்.

manoj - 2026

இதனால் மனோஜின் சித்தி அவருடன் பழகக்காதே எனக் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சைக் கேட்காத மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து குடித்தனம் வைத்து வாழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சித்திக்கும் மனோஜுக்கும் இடையே நாள்தோறும் சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.