சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவ.11ல் பொறுப்பேற்பு!

Published:

highcourtjudge - 2026

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ள ஏ.பி.சாஹி வரும் நவ.11ம் தேதி பதவியேற்கிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில் ரமானி, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த இடமாற்றத்தை மறுத்த தஹில் ரமானி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா, குடியரசுத் தலைவரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப் பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பீகார் தலைநகர் பாட்னாவின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வருகிறார்.

அம்ரேஷ்வர் பிரதாய் சாஹி எனப்படும் ஏ.பி.சாஹி, வரும் நவ.13ம் தேதிக்குள் பதவி ஏற்றுக் கொள்ளும்படி அவருக்கு தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், அவர் வரும் நவ.11ம் தேதி பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

கிண்டி ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img