
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அதே சமயம் கமல் திரையுலகிற்கு வந்த 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு 3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அப்புதிய கட்டிடத்தை நடிகரும் நண்பருமான ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்.

மேலும் அங்கு இவர்களின் குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் திருவுருவ சிலையை ரஜினியும் கமலும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா, மணிரத்னம், கே எஸ் ரவிக்குமார், நடிகர் நாசர், பாடலாசிரியர் வைரமுத்து, புஷ்பா கந்தசாமி, பிரமிட் நடராஜன், சந்தான பாரதி, ரமேஷ் அரவிந்த், ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன், நடிகை பூஜா குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை ஹே ராம் படத்தின் காட்சி திரையிடப்படுகிறது.

முன்னதாக நேற்று கமல் ஹாசன் பரமக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது அப்பாவின் திருவுருவ சிலையைத் திறந்து வைத்தார்.இதில் திரை துறை சார்ந்தவர்களும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.