இளம் பெண் குழந்தையோடு மாயம்

Published:

  murugeshwari-photo-horz வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள ஊரைச் சார்ந்த முருகேஷ்வரிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவுடன் என்ற ரஜினி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி முருகேஷ்வரியையும் மகள் புவனேஸ்வரியும் காணாமல் தவித்தார். ஒரு வேளை உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. பாலா இடங்களில் தேடியும் அவர், மற்றும் குழந்தையும் காணவில்லை. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயையும், மகளையும் யாரும் கடத்திச் சென்றார்களா இல்லை வீட்டில் கணவன் மனைவி சண்டை காரணமாக எங்கேயும் சென்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img