“போலீஸார் பொய் வழக்கு!” சிதம்பரம் தீட்சிதர் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

chidambaram bakthai - 2026

சிதம்பரம் போலீஸார் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக, தீட்சிதர் தர்ஷன் மனுவில் கூறிய கருத்துக்கு பதில் அளிக்குமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன்ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் 2-வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டுமென தகராறு செய்ததாகவும், தன்னை நோக்கி கையை தூக்கியதால், தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு பதியப் பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளர். எனவே, இது தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷன், அர்ச்சனை செய்து வழிபட வந்த பெண்மணியை தாக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து சிதம்பரம் தீட்சிதர் வட்டாரங்களில் குறிப்பிடப் படுவதாவது…

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அந்தப் பெண்மணி, அர்ச்சனைக்கு தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாராம். இவர் அருகே நின்றிருந்த அசிஸ்டெண்ட் தீட்சிதர் சிறுவனைப் பார்த்து, தேங்காய ஒடச்சிட்டுகொண்டு வா என்று கூறியிருக்கிறார். அந்தப் பையன் எள் என்றால் எண்ணெய் ரகம் போலுள்ளது… தேங்காயை உடைத்து, ஸ்வாமிக்கு நைவேத்தியமே செய்துவிட்டு, அதில் அர்ச்சனைப் பூக்களையும் போட்டு கொண்டு வந்துவிட்டானாம்…

இந்த அம்மா கேட்டிருக்கிறார்… ஏஞ்சாமி பையன் பிறந்த நாள், அர்ச்சனை செய்து, நைவேத்யம் செய்து பிரசாதம் கொடுப்பீங்கன்னுதானே பாத்தேன்… இப்படி செய்யிறீங்களே.. பையன் பேரு நட்சத்திரம் கூட கேக்கலியே என்று கூறியிருக்கிறார்…

அதற்கு தர்ஷன், அதனாலென்னா… நீங்களே உங்க பையன் பேரு நட்சத்திரத்தை எல்லாம் மனசில நெனச்சிக்க வேண்டியதானே… என்று சொல்லியிருக்கிறார்…

நாங்களே மனசில நினைச்சிக்க… நீங்க என்ன மயித்துக்கு இங்க ஒக்காந்திருக்கீங்க… என்று அவர் கேட்டிருக்கிறார்…?!

அதன்பின்னர்… வாக்குவாதம் முற்றியதாகக் கூறப் படுகிறது! அப்போது, ஒருவரை ஒருவர் தாக்க முனைந்த போது, அந்தப் பெண்மணியை இவர் தடுத்ததாகவும், அந்தப் பெண்மணி நிலை தடுமாறி கீழே சரிந்ததாகவும், ஆனால் தாம் கீழே விழுந்ததாகவும், காயம் பட்டதாகவும் போலீசில் புகார் கொடுத்டிருக்கிறார் என்கிறார்கள்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இந்த விவகாரத்தில் கோயிலில் சிசிடிவி பதிவு கிடைக்கவில்லை என்கிறார்கள். காட்சிப் பதிவு வசதி அங்கே இல்லையாம்.

இதை அடுத்து, தீட்சிதர்கள் ஒன்று கூடி, ரூ. 5 ஆயிரம் அபராதம், 2 மாதம் கோயில் பணியில் இருந்து சஸ்பெண்ட் என முடிவு செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories