அன்று தமிழர்களை ஓட ஓட விரட்டிய சிவசேனாவுக்கு… இன்று ஓடிப் போய் வாழ்த்து சொல்லும் ஸ்டாலின்!

stalin meme2 - 2026

மகாராஷ்டிரா முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள உத்தவ் தாக்கரேவுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் திடீர் என்று ஆட்சிக்கு வந்து, திடீரென்று பெரும்பான்மை இல்லை எனக் கூறி பாஜக., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 4 நாட்களில் ராஜினாமா செய்த பின்னர், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசில் முதல்வராக நாளை பதவி ஏற்கவுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வராகப் பதவிஏற்கவுள்ள சிவசேனையின் தலைவராக இருந்த காவிப் புயல், மராட்டிய சிங்கம் பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவுக்கு, திராவிட தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மகனும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரையும் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாராம்.

uddhav thackeray - 2026

மேலும், “உத்தவ் தாக்கரேவுக்கு திமுகவின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதல்வராவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்” என உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

அது போல், “மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க் கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்” என சரத் பவாருக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

bal tackary - 2026

இதனிடையே, மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவுக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மராட்டியம் மராட்டியருக்கே என்ற கோஷத்தை முதன்முதலில் கையிலெடுத்து அரசியல் செய்தவர் சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே. மும்பையை மராட்டியர் மயமாக்க முயன்றவர். தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக மும்பைக்கு சென்றவர்கள் மீது சிவசேனையினர் தாக்குதலும் நடத்தியதுண்டு. தமிழகத்தில் மொழிப் பிரச்னை தலை தூக்கும் போதெல்லாம், மும்பையில் தமிழர்கள் அச்ச உணர்வுடனேயே சென்றதுண்டு.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தீவிர இந்துத்துவ சித்தாந்தங்களைக் கடைப்பிடித்தவர் பால்தாக்கரே. முழுக்க முழுக்க இந்துக்களுக்காகவே கட்சியை நடத்தியவர். தற்போது பாஜக.,வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்து காங்கிரஸ் மற்றும் ஹிந்து விரோத கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், இந்துக்களுக்கான கட்சியாக தனித்துவ அடையாளத்துடன் திகழ்ந்த சிவசேனை தனது அடையாளத்தை இழந்து, அந்த அடையாளத்தை பாஜக.,வுக்கு அளித்துவிட்டதாக மகாராஷ்டிரத்தில் பேசப் படுகிறது.

1 COMMENT

  1. தமிழ் இன துரோகி தெலுகு வம்சம் கொள்ளையர் கூட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories