குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து.. ஜமாஅத் போராட்டத்தில் பங்கேற்ற மதுரை எம்பி., மீது வழக்கு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
venkatesan - 2026

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் ஐக்கிய ஜமாத் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய மதுரை எம்.பி., வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துகை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திருமுருகன் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்ட முன்னூறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.