கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

சற்றுமுன் பொது தகவல்கள்
gas 1 1 - 2026

14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று (ஜன.,1) முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக 5வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தில்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் காஸ் சிலிண்டரின் விலை டில்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது.

ஒரு காஸ் சிலிண்டர் கோல்கட்டாவில் ரூ.21.5 விலை உயர்த்தப்பட்டு ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ. 734க்கு விற்பனையாகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல், தற்போது வரை மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை மொத்தம் ரூ.140 விலை உயர்ந்துள்ளது.

தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலையை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.