
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சிறப்பு சந்தையில் கரும்பு, பொங்கல் பொருட்கள் குவிந்துள்ளன.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள், காய்கறிகள் விலை உயர்வாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகை விலை உயர்ந்து ரூ.2,100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு ஒரு கிலோ ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது.

கரும்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால், கரும்பு விலை குறையும் என எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் ஒரு கட்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.