மறைமுக தேர்தல்: விருதுநகரில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள்
vettu 1 - 2026

இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி வெங்கடேசனை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டினர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி ஒன்றியத்தில் இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வந்தது.அங்கு பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி வெங்கடேசன் ஒன்றிய அலுவலகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களை தடுக்க முயன்றபோது டிஎஸ்பி வெங்கடேசனை அரிவாளால் வெட்டி விட்டு சென்று விட்டனர். மேலும் அவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.