ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது நடந்த இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி அதற்கான விண்ணப்பத்தில் கைநாட்டு வைத்தார். அதை உறுதி செய்தவர் அரசு மருத்துவர் டாக்டர் பாலாஜி.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் பாலாஜி ₹5 இலட்சம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இது பொய் சாட்சி சொன்னதற்காக கொடுக்கபட்டது என பரபரப்பு கிளம்பியது.
இதை மறுத்த டாக்டர் பாலாஜி “அந்த பணம் வாங்கியது உண்மை தான் ஆனால் அது இலண்டன் மருத்துவர் தங்கும் செலவிற்காக தரப்பட்டது” என கூறியுள்ளார்.
வெளிவந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என தினகரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வந்த நிலையில் டாக்டரின் இந்த கருத்தால் சசிகலா தரப்பிற்கு நெருக்கடி கூடியுள்ளது.



