பள்ளி வேன்- பஸ் மோதி விபத்து : 44 பேர் காயம்

சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும், பஸ்சும் மோதியதில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். நெல்லை மாவட்டம்  சங்கரன்கோவில் அருகேயுள்ள கே.ஆலங்குளத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் படம் பார்க்க வேனில் சென்றார்களாம். வேனை ஜெயக்குமார்(37) ஓட்டிச்சென்றுள்ளார். இதில் 25 மாணவ, மாணவிகள் இருந்தனர். மேலும் தேவக்கனி(55), தெய்வக்கனி(45), அந்தோணியம்மாள்(45) ஆகிய ஆசிரியைகளும் மாணவர்களுடன் சென்றனர். வேன் அவணிகோனேந்தல் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது சங்கரன்கோலில் இருந்து கோவில்பட்டிக்கு சென்ற தனியார் பஸ்சும், வேனும் மோதிக்கொண்டன. இதில் வேனில் இருந்த 25 மாணவர்கள் மற்றும் டிரைவர், ஆசிரியைகள் உள்ளிட்ட 29 பேரும் பஸ்சில் வந்த 15 பயணிகளும் காயமடைந்தனர். தகவலறிந்து சங்கரன்கோவில் போலீசார் விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டனர்.