பொது தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி மன அழுத்தத்தை போக்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டி அரசு பொதுத்தேர்வில் அனைத்து மாணாக்கர்களும் தேர்ச்சி பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உழைக்க அன்புடன் கேட்டு கொண்டார்.



