மறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
auto driver - 2026

சென்னை அடுத்த ஓட்டேரி ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (34). ஆட்டோ டிரைவரான இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் குளிப்பதை சுவர் மீது ஏறி நின்று தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண்ணின் தாய் கூச்சலிட்டு அவரது செல்போனை பிடுங்கியுள்ளார்.

bath - 2026

மேலும், இதுகுறித்து அவர் தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்தி காவல்துறையினர், ஆட்டோ டிரைவரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அதனை சோதனை செய்தபோது, அதில் இளம்பெண் குளிப்பதை படம் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோ ஓடடுநர் வினோத்குமாரை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.