கல்லூரி மாணவிகளை போட்டோ எடுத்து, ஆபாசமாக சித்தரித்து.. அதிர்ச்சியில் மாணவிகள்

kannan - 2026

குடும்ப பெண்களின் உடலமைப்பு + கல்லூரி மாணவிகளின் முகம், இவைகளை ஒன்று சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து அவைகளை டிக்டாக் மற்றும் வீடியோக்களாக பதிவிட்ட 19 வயது கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன். வயசு 19தான் ஆகிறது.. படிப்பும் சரியாக படிக்கவில்லை. வெறும் 9-ம் வகுப்புதான் படித்துள்ளார்.

ஆனால் டிக்-டாக்கில் கிட்டத்தட்ட 1,000 வீடியோக்கள் வரை அப்லோடு செய்துள்ளார். இவருக்கு 4.18 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதற்கு காரணம் இவரது வீடியோக்கள்தான்.

கண்ணன் பார்ப்பதற்கே படு ஸ்மார்டாக இருக்கிறார்.. 9ம் வகுப்பு படித்துவிட்டு, காலேஜ் படிப்பதாக சொல்லி வந்துள்ளார். அதற்கேற்ற மாதிரி டிப்டாப் டிரஸ்கள்தான் அணிவார். பார்ப்பதற்கே பணக்கார வீட்டு பையன் போல இருக்கவும், கல்லூரி மாணவிகள் சிலரும் கண்ணனிடம் நட்பாக பழகி வந்துள்ளனர்.

அதாவது 25க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தனி தனியாக.. ஆசை வார்த்தை கூறி… காதல் வலையில் விழ வைத்துள்ளார்.. ஒரு மாணவியை விழ வைப்பது இன்னொரு மாணவிக்கு தெரியாது. எல்லாருமே கண்ணனின் டிரஸ், பேச்சினை கண்டு ஏமாந்துவிட்டனர்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

அந்த மாணவிகளிடம் செல்பி போட்டோ, வீடியோக்களை எடுத்து கொள்வார்.. பிறகு கல்யாணமான பெண்களின் போட்டோக்களையும் தனியாக எடுத்து கொள்வார். இவைகளை மார்பிங் செய்து டிக்-டாக்கில் வெளியிட்டு வந்துள்ளார்

கண்ணனின் இந்த போட்டோ, வீடியோக்களை ஏராளமானோர் ஜொள்ளு விட்டு பார்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து சில பெண்களை கண்ணன் மிரட்டியும் வந்திருக்கிறார்.

இவரது மிரட்டலை கண்டு பயந்த மாணவிகள், வீட்டுக்கு விஷயம் தெரிந்துவிடக்கூடாது என்று தாங்கள் அணிந்திருந்த செயின், வளையல், மோதிரங்களை கழட்டி தந்துள்ளனராம்.

ஆனாலும் ஒரு சில பெண்கள் இதற்கு பணியவில்லை. கண்ணனின் மிரட்டலை பொறுக்க முடியாமல் தென்காசி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கண்ணனை காவல்துறை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்ட், பென்டிரைவ் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கண்ணன் மீது இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து வருகிறது.

கண்ணனின் வலையில் சில தொழிலதிபர்கள், சில அரசு அதிகாரிகளின் மகள்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கண்ணனுக்கு நண்பர்கள் 2 பேர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதனை ரசிப்பதுதான் இவர்களின் வேலையாக இருந்திருக்கிறது.. இதுபோக ஒரு யூ-டியூப் சேனலையும் இவர்கள் நடத்தி வந்துள்ளனர்..

அது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது. கண்ணனின் தம்பிக்கும் இந்த சம்பவங்களில் தொடர்பு உள்ளதாம். எல்லாவற்றையும் காவல்துறை விசாரணை மூலம் வெளிக்கொண்டு வருவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories