கரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமாருக்கு டாக்டர் பட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
karur lions news1 - 2026

அனைத்து லயன்ஸ் சங்கங்கள் பாராட்டுகரூர் ஹேண்ட்லூம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான லயன் ஜெ.டெக்ஸ் சிவக்குமார் அவர்களுக்கு அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழ்ப் பல்கலை கழகம், யு.எஸ்.ஏ ( USA) சார்பில் தொழில் மற்றும் சமூக சேவைக்கான கௌரவ  டாக்டர் பட்டத்தை சென்னையில் கொடுத்து கெளரவித்தது.

இந்நிலையில் கரூர் ஜவஹர் பஜார் ஹோட்டல் ஆர்யாஸ் ஹாலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற லயன் சிவக்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அனைத்து லயன் சங்கங்கள் சார்பில் லயன்ஸ் சங்கத்தின் முதல் துணை ஆளுநர் சேதுக்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் லயன் சங்கத்தில் சிறந்த சமூக சேவை செய்துவரும் தொழில் அதிபருமான லயன் சிவக்குமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தது இந்நிகழ்ச்சியில் கரூர் கரூர் பிளாட்டினம் கரூர் காந்திகிராமம் கருர் பள்ளபட்டி லயன்ஸ் புகலூர் லயன்ஸ் அரவக்குறிச்சி லயன்ஸ் கிளப் லயன்ஸ் சங்கங்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மண்டலத் தலைவர் சுப்பிரமணிய பாரதி, வட்டார தலைவர்கள் குமார்,  வாங்கிலி, மாவட்ட தலைவர்கள் சுமங்கலி செல்வராஜ் சேது சுப்பிரமணியன்,  சண்முகம், ஜெயா பொன்னுவேல், அன்வர் அலி, ஜாஹீர் உசேன், பிளாட்டினம் லயன்ஸ் நேஷ்னல் கணேஷ், ராமலிங்கம், முரளி, நொய்யல் மணி நேதாஜி அசோக், சுந்தர கணேசன் மற்றும் திரளான நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான மேலை.பழனியப்பன் ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.