தப்ளிக் ஜமாத் தொடர்பு: பரிசோதனைக்குச் சென்ற அரசு மருத்துவக் குழுவினரை அடித்து விரட்டிய ‘மர்ம’ மனிதர்கள்!

Published:

kovilpatti attack - 2026

தில்லியில் கடந்த மார்ச் மாத மத்தியில் நடைபெற்ற தப்ளிக் இ ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு கலந்து கொண்ட மர்ம மனிதர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அவரின் மர்மமான கிராமத்திற்கு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற அரசு மருத்துவக் குழு, மர்ம நபர்களால் அடித்து விரட்டப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்ஊத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தில்லியில் நடைபெற்ற தப்ளிக் இ ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஊருக்குத் திரும்பியிருந்தார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் வசித்து வந்த அய்யனார்வூத்து கிராமம் தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது. தொடர்ந்து, அந்த கிராமத்தை போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது மாவட்ட நிர்வாகம்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இந்நிலையில் மேற்படி மர்ம நபரின் குடும்பத்தினருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக சனிக்கிழமை நேற்று மாலை மருத்துவக் குழுவினர், தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சென்றனர்.

பரிசோதனை முடிந்து குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு மருத்துவக் குழுவினர் புறப்படத் தயாரானபோது, மருத்துவ குழுவினரை செல்ல விடாமல் வண்டியைத் தடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ‘மர்ம’ இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மருத்துவ குழுவினர் மீது அந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

இந்த மர்மமான தாக்குதலில் சுகாதார ஆய்வாளர் காளிராஜின் சட்டை கிழிந்தது. செல்போனை பறித்துக் கொண்டு அவரது பைக்கையும் கண்மூடித்தனமாக அடித்து, மர்ம கும்பல் சேதப்படுத்தியது.

இந்த நாட்டின் சட்டத்துக்கு தாங்கள் கட்டுப் படத் தேவையில்லை என்று ‘மர்ம’மான மதத்தின் அடிப்படைவாதிகளால் மத போதனை செய்யப்பட்ட அந்த மர்ம இளைஞர்களின் அடாவடித் தாக்குதலால், இந்திய நாட்டின் சட்டத்தை செயல்படுத்த வந்த தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, தாசில்தார் பாஸ்கரனும், இன்ஸ்பெக்டர் முத்துவும் பெரிதும் ஆடிப் போனார்கள்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

செய்வதறியாது திகைத்த அவர்களின் நிலைமையைக் கண்டு மனம் இரங்கிய அந்த மர்ம இளைஞர்களின் கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் பெரியவர்கள், அரசு அதிகாரிகளுக்குக் கைக்கொடுக்க வந்தனர். இதை அடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் அந்தக் குடும்ப உறுப்பினர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மருத்துவக் குழு தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவத் துறையினருக்கு தெரிந்தது. அவர்கள், கயத்தாறு அரசு மருத்துவமனையில் கூடி தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி ஆவேசம் அடைந்தனர். பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்ட்ம் என்று கோரியும் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று அவர்கள் தங்கள் பணிக்குச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் மர்ம நபர்கள் அல்லாத வெகுஜன மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களுக்கு வைரஸ் நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்குமே அரசும் மருத்துவப் பணியாளர்களும் செயல்படுகிறார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபடுவதை அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img