இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
beeula rajesh - 2026
  • தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மொத்தம் 690 பேர் கொரோனாவால் பாதிப்பு
  • சென்னையில் 149 பேருக்கு கொரோனா
  • சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி….
  • சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்வு….
  • கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது
  • திருப்பூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 13 பேருக்கு கொரோனா – மொத்தம் 16 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. .

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து இன்றைய அப்டேட்டட் தகவல்களை அளித்தார் தமிழக சுகாதாரச் செயலாளர் பியூலா ராஜேஷ். அப்போது அவர் தெரிவித்தவை…

beeularajesh - 2026

வீட்டு கண்காணிப்பில் 66,431 பேரும், அரசு கண்காணிப்பில் 353 பேரும் உள்ளனர். 23 நாள் கண்காணிப்பு முடிந்து 27,414 பேர் திரும்பியுள்ளனர். 15 லட்சம் வீடுகளில் 53 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில், 30, 629 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோட்டில் கொரொனா வைரஸ் சோதனைக்காக மேலும் ஓர் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,305 பேருக்கு பரிசோதனை நடந்தது. செவ்வாய்க்கிழமை இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது. அவர்களில் 63 பேர் தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மேலும் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் வெளிமாநிலம் சென்று வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுப் பெண் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

19 பேர் கொரொனா பாதிப்பில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் விவரம்

சென்னை – 149
கோவை – 60
திண்டுக்கல்-45
நெல்லை-38
ஈரோடு-32
திருச்சி-30
நாமக்கல்-28
ராணிப்பேட்டை-27
செங்கல்பட்டு -24
மதுரை-24
கரூர்-23
தேனி- 23
தூத்துக்குடி-17
விழுப்புரம்-16
திருப்பூர் – 16
கடலூர்-13
சேலம்- 12
திருவள்ளூர்- 12
திருவாரூர்- 12
விருதுநகர்- 12
தஞ்சாவூர்- 12
நாகை – 11
திருப்பத்தூர்- 11
தி.மலை-11
குமரி-6
காஞ்சிபுரம் – 6
சிவகங்கை-5
வேலூர்-5
நீலகிரி-4
கள்ளக்குறிச்சி-2
ராமநாதபுரம்-2
அரியலூர்-1
பெரம்பலூர்-1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.