கொரோனாவை விட கொடூரம்! ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்!

Published:

corona alert - 2026
  • கொரோனாவை விட கொடூரமான முறையற்ற மருத்துவம்!
  • கொரோனா வைரஸ் தடுப்புக்கு ஊமத்தை பூவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பு!
  • ஆந்திர மாநிலம் சித்தூரில் ஊமத்தை மருந்து குடித்த 7 பேர் கவலைக்கிடம்!
  • உரிய மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சித்தூர் காவல் துறை அறிவிப்பு!
umaththampoo - 2026

ஊமத்தங்காய் சாறு குடித்து ஏழு பேருக்கு அவதி. நாட்டு சாராயம் குடித்தாலும் ஊமத்தங்காய் மிக்சர் குடித்தாலும் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று பிரச்சாரம் நடந்ததால் சித்தூர் மாவட்டத்தில் 7 பேர் உயிருக்கு ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்!

சித்தூர் மாவட்டம் பைரெட்டிபல்லி மண்டலம் எ கொத்தூரு கிராமத்தில் செவ்வாயன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நிலை கோளாருக்கு ஆளானர்கள். கரோனா வைரஸ் தீர்வுக்காக ஊமத்தங்காய் மிக்ஸர் குடித்ததால் இந்த சம்பவம் நேர்ந்தது.

செய்தி அறிந்த அதிகாரிகள் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்கள் ! எதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. சாராயம் குடித்தால் கரோனா வராது என்றெல்லாம் தவறான மெசேஜ்கள் சுற்றி வருகின்றன. இவற்றை எல்லாம் நம்பி மோசம் போய்விடாதீர்கள் மக்களே!

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img