மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் (e-pass) தேவையா?!

Published:

epass
tn-epass

இ பாஸ் அல்ல-இ பதிவு: தமிழக அரசு விளக்கம்!

வரும் மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ பாஸ் தேவையில்லை என்றும், இ ரிஜிஸ்டர் வேறு, இ பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு நேற்று இரவு மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில்,
“ மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது. மாறாக மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணைய தளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப் படுகிறது”என்று தெரிவித்துள்ளது.

அதாவது இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்! ஆனால் இ~பதிவு என்றால் இணையத்தில் பதிவுசெய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெறத் தேவையில்லை.

செய்தி வெளியீடு எண். 069 நாள் :14 .05.2021

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கு காலத்தில்,
தமிழ்நாட்டில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 15.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஒருசில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இன்று (14.05.2021) அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக் கிடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெற்று பயணிக்க
வேண்டும் என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்படுகிறது. மாறாக, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை
https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img