அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் சார்பில் அரிசி வழங்கல்.

உள்ளூர் செய்திகள் திருச்சி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எஸ்கே பிராய்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கரோனா துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி துப்புரவு தொழிலாளர் 229 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.நகராட்சி கமிசினர் முத்துகணேஷ் நகர வங்கி தலைவர் ஆதிமோகனகுமார்,வர்த்தகசங்க தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்வில் முன்னாள் ரோட்டரி தலைவர் காமராஜ் 229 துப்புரவு பணியாளருக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார் நிகழ்வில் வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்குமார்,சலீம்,துப்புரவு ஆய்வாளர் சேகர் ரோட்டரி நிர்வாகிகள் சந்திரமோகன்,கார்த்திகேயன்,தட்சிணாமூர்த்தி,சோலையப்பன்,விஜயா துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

260420 11
260420 11

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.