கொரோனாவுக்கு எதிராக இது மக்களால் நடத்தப் படும் போர் என்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
இன்று காலை பிரதமர் மோடி வானொலி வாயிலாக மன்கி பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியது…
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்
பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அரசு நிர்வாகங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிட்டு வருகின்றன
ஊரடங்கு காலத்தில் நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்
கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம், மக்களால் நடத்தப்படும் போர் –
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகின்றனர்
ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் போன்றவர்களின் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்ந்து வருகிறோம்
நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசமானது, சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை
நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும்
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரம்ஜான் முடிவதற்குள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து உலகம் முழுமையாக மீண்டு வர முன்னெப்போதும் விட இந்த ரம்ஜான் மாதத்தில் கூடுதலாக பிரார்த்திக்க வேண்டும் .
பொதுவெளியில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மோசமான பழக்கத்தை கைவிடும் நேரம் வந்துவிட்டது.
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்
கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்