கொரோனா: நிறைமாத கர்ப்பிணி: பிரசவித்த நிலையில் தொற்று உறுதி!

Published:

pregnant women

திருவல்லிக்கேணி கபாலி நகர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண். இவரது கணவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்த பெண் கடந்த 27ஆம் தேதி மீர்சாகிபேட்டை பேகம் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு மறுநாள் அதாவது 28 ஆம் தேதி குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்த பெண் உடனடியாக கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இவருடன் தங்கியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்திவிட்டு கபாலி நகரை போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img