சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் உடல் அடக்கத்தை தடுத்த 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருந்த டாக்டர், கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்தார்.
அதில், அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய டி.பி.சத்திரம் பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் வேலங்காடு மயான பூமிக்கு கொண்டு சென்றனர். அப்பகுதியை சுற்றி இருப்பவர்களும் போராட்டம் நடத்தி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஆம்புலன்ஸ் சேதமடைந்தது. இதில் சுகாதார ஊழியர்கள் காயமடைந்தனர்.
பின்னர், கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, டாக்டர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 74 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பலரை கைது செய்துள்ளனர். அவர்கள் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதான பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.